Homeசெய்திகள்சினிமாமம்மூட்டி நடிக்கும் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் டீசர் வெளியீடு!

மம்மூட்டி நடிக்கும் ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு!

-

மம்மூட்டி நடிக்கும் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.மம்மூட்டி நடிக்கும் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் டீசர் வெளியீடு!

மம்மூட்டி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம்தான் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். இந்த படத்தினை பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாள படம் இது. இந்த படத்தினை மம்மூட்டி தயாரிக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். தர்புகா சிவா இதற்கு இசையமைக்க அந்தோணி எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து கோகுல் சுரேஷ், சுஷ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து ஏறத்தாழ நிறைவடைந்துள்ள இந்த படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது இப்படம் காமெடி கலந்த கதைக்களம் போல் தெரிகிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசரின் இறுதியில் இப்படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ