Homeசெய்திகள்சினிமாமம்மூட்டி நடிக்கும் 'டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்'..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மம்மூட்டி நடிக்கும் ‘டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

மம்மூட்டி நடிக்கும் டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.மம்மூட்டி நடிக்கும் 'டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்'..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகராக வலம் வரும் மம்மூட்டி அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் காதல் தி கோர், பிரம்மயுகம், டர்போ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியானது. அதைத்தொடர்ந்து மம்மூட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் மம்மூட்டி, தனது மம்மூட்டி கம்பெனி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மம்மூட்டி நடிக்கும் 'டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்'..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! இந்நிலையில் தான் படக்குழுவினர் இன்று (செப்டம்பர் 7) நடிகர் மம்மூட்டியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் இப்படத்திற்கு டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் சம்பந்தமான கதைக்களம் என்பதையும் அந்த போஸ்டர் தெளிவுப்படுத்துகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ