Homeசெய்திகள்சினிமாமம்மூட்டி நடிப்பில் டர்போ... ரிலீஸ் தேதி அறிவிப்பு...

மம்மூட்டி நடிப்பில் டர்போ… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

மம்மூட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் டர்போ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோலிவுட் எனும் மலையாள திரையுலகின் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி. மம்மூக்கா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நாயகன் இவர். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கன்னூர் ஸ்குவாட். கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் பிரம்மயுகம்.

சதாவிசம் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சேவியர் படத்திற்கு இசை அமைத்தார். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.இதைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் டர்போ. புலி முருகன் படத்தை இயக்கிய வியாஷக் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

ஜஸ்டின் வர்கீசன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் வர்கீசன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இப்படத்தின் டீசரும் வெளியானது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ