மம்முட்டி நடிப்பில் பிரம்மயுகம் திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். இதில் மம்முட்டியுடன் இணைந்து சித்தார்த் பரதா, அர்ஜுன் அசோகன், அமல்டா லீஸ் நடிக்கிறார்கள். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசை அமைக்கிறார். இந்தப் படம் பான் இந்தியா ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாகிறது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் மம்மூட்டி மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக படுத்தி உள்ளது.
- Advertisement -