மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத் திரை உலகின் பிரபல நடிகர் மம்முட்டி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ‘பிரமயுகம்’ எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராகுல் சதாசிவன் இயக்குகிறார்.
நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கிய நிலையில், டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் அந்த போஸ்டரில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.