நடிகர் மம்மூட்டி, 72 வயதிலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு டாப் கொடுத்து நடிப்பில் மிரட்டி வருகிறார் . சமீபத்தில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் படத்தில் எதார்த்தமான போலீஸ் அதிகாரியாக மாஸ் காட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து மம்முட்டியின் அடுத்த படமாக “பிரம்மயுகம்” உருவாகியுள்ளது. போஸ்டர், டீசர் என அனைத்துமே கருப்பு வெள்ளையில் பார்ப்பதற்கே வித்தியாசமாக அமைந்துள்ளது. “பூத காலம்” படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. பாழடைந்த பழைய கோயில் போன்ற கட்டிடத்துக்குள் நடக்கின்ற திகில் அனுபவங்களை பற்றிய படமாக இது இருக்கும் என டீசரிலிருந்து தெரிகிறது.
#Bramayugam – Malayalam Teaser is here :https://t.co/S5jyjwsQh5
.#Bramayugam starring @mammukka
Written & Directed by #RahulSadasivan
Produced by @chakdyn @sash041075
Banner @allnightshifts @studiosynot
PRO @SureshChandraa @pro_sabari @venupro#BramayugamTeaser
— Night Shift Studios LLP (@allnightshifts) January 11, 2024
மேலும் இந்த படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிக்கிறார் என்றும் செய்திகள் ஏற்கனவே வெளியாகின.டீசர் முடியும் பொழுது வயதான லுக்கில் மம்மூட்டியின் என்ட்ரியும், எண்ணெய் தீபத்தை ஊதி அணைக்கும் போது மம்மூட்டியின் மேனரிசமும் அடிபொலி. செஹ்நாத் ஜலால் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. மேலும் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.