பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சைஃப் அலிகான் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் திரை உலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது கடந்த ஜனவரி 15ஆம் தேதி இரவு சைஃப் அலிகான் வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சைஃப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் தனது குழந்தைகளுடன் வெளியில் சென்று இருந்ததாக சொல்லப்படுகிறது.
#BREAKING Saif Ali Khan Attack Case: First photo of attacker, seen on CCTV at 2.33 am, released by Police #SaifAliKhan pic.twitter.com/Q65q8iRPYP
— Aristotle (@goLoko77) January 16, 2025
மேலும் அந்த மர்ம நபர் முகத்தை துணியினால் மூடி இருந்ததால் அடையாளம் தெரியவில்லை எனவும் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்தான் அந்த மர்ம நபர் சைஃப் அலிகானை தாக்கிவிட்டு படிக்கட்டுகளில் இறங்கி தப்பித்து ஓடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. அதைத்தொடர்ந்து அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். மேலும் போலீசார் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.