Homeசெய்திகள்சினிமாஇந்தியில் ரீமேக்காகும் சிம்புவின் 'மாநாடு'..... ஹீரோ யார் தெரியுமா?

இந்தியில் ரீமேக்காகும் சிம்புவின் ‘மாநாடு’….. ஹீரோ யார் தெரியுமா?

-

- Advertisement -

மாநாடு திரைப்படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் சிம்புவுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தார். படத்தை பி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். அரசியல் கதைகளத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் இந்தி ரீமேக்கில் வருண் தவனும் தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜாவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மாநாடு படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ராணா டகுபதி நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சிம்புவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வில்லன் கதாபாத்திரமான எஸ் ஜே சூர்யா ரோலில் மிகப் பிரபலமான நடிகர் ஒருவர் நடிகர் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ