Homeசெய்திகள்சினிமாசரித்திர கதையை மாற்றிய மணிரத்னம் - எதிர்ப்பு வலுக்கிறது

சரித்திர கதையை மாற்றிய மணிரத்னம் – எதிர்ப்பு வலுக்கிறது

-

- Advertisement -

அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலில் கதையில் இல்லாததை மணிரத்னம் தனது படத்தில் மாற்றியும், சேர்த்ததும் படம் எடுத்தது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஒரு சரித்திர கதையை ஒரு இயக்குனர் தன் விருப்பப்படி மாற்றி படம் எடுப்பது ஆரோக்கியமாது அல்ல என்று சில சமூக ஆர்வாளர்கள் கண்டித்துள்ளனர்.  இதுகுறித்து இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்திருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 சரித்திர கதையை மாற்றிய மணிரத்னம் - எதிர்ப்பு வலுக்கிறது

இந்திய சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் மணிரத்னமும் ஒருவர். இவர் இயக்கி வெளிவந்த ரோஜா, பம்பாய், தளபதி போன்ற படங்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த காலக்கட்டத்தில் அதிக வசூலையும் குவித்தது.

தற்போது அமரர் கல்கி எழுதிய “பொன்னியன் செல்வன்” என்ற சரித்திர நாவலை இயக்குனர் மணிரத்னம், 2 பாகங்களாக திரைப்படம் எடுத்துள்ளார். இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், பார்திபன், விக்ரமன், ஜெயம் ரவி, கார்த்திக், ஐஸ்வர்ராய், திரிஷா போன்ற திரை உலகின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளிவந்து அபார வெற்றிப்பெற்றது.

 சரித்திர கதையை மாற்றிய மணிரத்னம் - எதிர்ப்பு வலுக்கிறது

பொன்னியன் செல்வன் – பாகம் 2

பொன்னியின் செல்வம் 2 பாகம் வெளியாகி ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்து வருகின்றனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்க வாய்ப்பில்லை.

அதனால் எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். சிலர் அந்த நாவல் முழுவதையும் படித்திருக்கின்றனர். படத்தின் இறுதியில் கல்கி எழுதிய கதை இல்லை என்றும் மணிரத்தனம் தன் விருப்பப்படி கதையை மாற்றி இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர் ஒருவர், “பொன்னியின் செல்வன் 2” பாகத்தில் நாவலில் இல்லாத சிலவற்றை கற்பனைக்கு ஏற்றார் போல் சேர்த்தும், தன் விருப்பப்படி சில வற்றை நீக்கியும் இருக்கிறார்.

 சரித்திர கதையை மாற்றிய மணிரத்னம் - எதிர்ப்பு வலுக்கிறது

மேலும், இப்படி ஒரு கருத்து சிதைவை எடுக்க மணிரத்தனம் யாரிடம் அனுமதி பெற்றார். அடுத்த தலைமுறையினர் இந்த படத்தை பார்த்தால் இந்த படம் உண்மையானதா ? கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் உண்மையானதா என்று குழம்பிப் போக மாட்டார்களா? என்று கேள்வி எழுப்பினார். ஒரு சரித்திர நாவலை படமாக எடுக்கும்போது கவனமாக எடுக்க வேண்டாமா என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

இயக்குநர் மணிரத்னம் கருத்து:

பொன்னியன் செல்வன் கதையில் மாற்றம் செய்து படம் எடுத்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், கல்கி எழுதிய சரித்திர நாவல் ஐந்து பாகங்கள் கொண்டது. அதில் நிறைய கதாபாத்திரங்களை எழுத்து வடிவில் கொண்டுவந்துள்ளார். அது சாத்தியம். அதே கதையை திரைப்படமாக எடுக்கும்போது அப்படியே எடுக்க சாத்தியம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

 சரித்திர கதையை மாற்றிய மணிரத்னம் - எதிர்ப்பு வலுக்கிறது

மேலும், ஒரு சரித்திர கதையில் அனைத்து பாத்திரங்களையும் மூன்று மணி நேரத்தில் காட்சி படுத்துவது மிகவும் சிரமம் என்று தெரிவித்துள்ளார். காட்சி படுத்துவது என்பது கதையை நேரில் பார்ப்பது போன்றது. அதனால் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருந்தது என்றார் இயக்குநர் மணிரத்னம்.

MUST READ