நடிகர் கமல்ஹாசன் தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். அதேசமயம் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தனது 234 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இதற்கிடையில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் அல்லது அபிராமி நடிக்க உள்ளதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இந்நிலையில் இது குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது அதன்படி. தக் லைஃப் படத்தில் கமலுக்கு ஜோடியே இல்லையாம். மேலும் கூடுதல் தகவலாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷாவும், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.