ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் நடிகர் மணிகண்டன். இவர் அடுத்ததாக குட் நைட் எனும் படத்தில் கதாநாயகனாக களமிறங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து லவ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் மணிகண்டன். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து கண்ணன் ரவி, சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை பிரபு ராம் வியாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தை குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று தற்போது வரை வெற்றி நடை போடுகிறது. அந்த வகையில் 50வது நாளாக திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. இதனை பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு நக்கலைட்ஸ் இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.