Homeசெய்திகள்சினிமாகுட் நைட் படத்தை தொடர்ந்து வெற்றிப்பாதையில் நகரும் மணிகண்டனின் 'லவ்வர்'..... வசூல் எவ்வளவு?

குட் நைட் படத்தை தொடர்ந்து வெற்றிப்பாதையில் நகரும் மணிகண்டனின் ‘லவ்வர்’….. வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

குட் நைட் படத்தை தொடர்ந்து வெற்றிப்பாதையில் நகரும் மணிகண்டனின் 'லவ்வர்'..... வசூல் எவ்வளவு?ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமடைந்த மணிகண்டன் ஆரம்பத்தில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் சூர்யா நடிப்பிலும் டி.ஜே. ஞானவேல் இயக்கத்திலும் வெளியான ஜெய் பீம் படம் நடிகர் மணிகண்டனுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. அதன் பிறகு மணிகண்டன் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் குட் நைட் எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிலையில் அடுத்ததாக லவ்வர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் அளித்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பிரபு ராம் வியாஸ். குட் நைட் படத்தை தொடர்ந்து வெற்றிப்பாதையில் நகரும் மணிகண்டனின் 'லவ்வர்'..... வசூல் எவ்வளவு?மணிகண்டனின் குட் நைட் பட வரிசையில் லவ்வர் திரைப்படமும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்  இந்த படம் தற்போது வரை 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் லவ்வர் திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ