Homeசெய்திகள்சினிமாமணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் புரமோ படப்பிடிப்பு தொடங்கியது

மணிரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் புரமோ படப்பிடிப்பு தொடங்கியது

-

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது. இப்படத்திசற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைகின்றனர். இந்தப் படத்தில் சிம்புவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. கமல் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். எனவே கமல் இருக்கும் இடங்களில் அதிகமாக சிம்புவை பார்க்க முடிகிறது. விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட சிம்பு கலந்து கொண்டார். மேலும் பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் கமலுடன் சிம்புவும் அங்கு காணப்பட்டார். ஆனால் சிம்பு மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டாராம்.

இந்நிலையில் முதல் கட்டமாக படத்தின் புரோமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

MUST READ