மனிஷா கொய்ராலா நடிக்கும் ‘ஹீராமண்டி’ வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
1990 கால கட்டங்களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசனின் இந்தியன் படத்திலும், அரவிந்த்சாமியின் பம்பாய் படத்திலும், ரஜினியின் பாபா படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு ஹீராமண்டி எனும் வெப் தொடரில் நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா. இந்த தொடரை, கடந்த 2018 இல் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பத்மாவத் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இவர் கடைசியாக இயக்கியிருந்த படம் கங்குபாய் கத்தியவாடி. இதைத்தொடர்ந்து இவர் இயக்கியுள்ள வெப் தொடர்தான் ஹீராமண்டி.
First look of Sanjay Leela Bhansali’s #Heeramandi NETFLIX Web Series.
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 1, 2024
இதில் மனிஷா கொய்ராலா உடன் இணைந்து சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ், சர்மின் சேகல், ரிச்சா சதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வெப் தொடர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.