Homeசெய்திகள்சினிமாதிருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய மஞ்சிமா மோகன்!

திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய மஞ்சிமா மோகன்!

-

- Advertisement -

நடிகை மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய மஞ்சிமா மோகன்!

நடிகை மஞ்சிமா மோகன் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர், தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம், FIR ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தான் இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர், படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். அதன்படி திருமணத்திற்கு பின்னர் மஞ்சிமா மோகன் சினிமாவில் நடிக்க மாட்டார் என தகவல் வெளியானது. ஆனால் மஞ்சிமா மோகன் தற்போது சைலண்டாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் என தகவல் கிடைத்துள்ளது.திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய மஞ்சிமா மோகன்!அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சுழல் என்ற வெப் தொடர் வெளியானது. இதனை புஷ்கர் – காயத்ரி இயக்கியிருந்தார். பரபரப்பான திரைக்கதையில் வெளியான இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றிக்கு பிறகு தற்போது சூழல் 2 என்ற வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது. இது வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய மஞ்சிமா மோகன்!இந்நிலையில் இந்த வெப் தொடரில்தான் நடிகை மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறாராம். இவருடைய கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரம் எனவும் இக்கதாபாத்திரத்தை படக்குழு மிகவும் சர்ப்ரைஸாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே சுழல் 2 வெப் தொடரில் மஞ்சிமா மோகனின் கதாபாத்திரம் என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ