Homeசெய்திகள்சினிமாதிரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அநாகரிகமான பேச்சு.... சர்ச்சையை ஏற்படுத்தும் வீடியோ!

திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அநாகரிகமான பேச்சு…. சர்ச்சையை ஏற்படுத்தும் வீடியோ!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் மன்சூர் அலிகான், 1990 இல் இருந்து கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக திரை துறையில் பணியாற்றி வருகிறார். சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் துணை நடிகராகவும், கொடூர வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சில காலமாக மன்சூர் அலிகான், தமிழ் சினிமாவில் காமெடியானாகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. லியோ படத்தில் விஜய், சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். விஜய்யும் திரிஷாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மன்சூர் அலிகான் விஜய்க்கு நெருங்கிய நண்பராக நடித்திருப்பார். லியோ படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு சில காட்சிகளும் மட்டுமே இருக்கும்.

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான், ” இப்போ எந்த படத்திலயும் வில்லன் ரோலே கொடுக்க மாட்டேங்கிறாங்க. இதை லியோ ஆடியோ லான்ச்லயே சொல்லி இருப்பேன். நிறைய பேர் கலவரம் செய்ய வேண்டும் என்று நினைப்பதால் சொல்லாமல் விட்டுவிட்டேன் இங்கே சொல்கிறேன். லியோவில் திரிஷா நடிக்கிறார் என்றால் நிச்சயமாக பெட்ரூம் சீன் இருக்கும்………… ஆனால் திரிஷாவை கண்ணுலையே காட்ட வில்லை” என்று அநாகரிகமாக பேசியிருக்கிறார். மன்சூர் அலிக்கான் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வைரலாகி வருவது மட்டுமில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எப்படி ஒரு பெண்ணை பற்றி மன்சூர் அலிகான் இப்படி பேசலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

MUST READ