- Advertisement -
மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக தீவிரம் அடைந்த கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை நகரமே வௌ்ளத்தில் தத்தளித்தது. மூன்று நாட்களை கடந்த போதிலும் சென்னை நகரம் இதுவரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பல இடங்களில் உண்ண உணவு இல்லாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் மக்கள் பால் பாக்கெட்டுகளுக்காக ஈ போல மொய்க்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர், அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்து வருகின்றனர்.
பல வீடுகளை தீவு போல வெள்ளநீர் சூழந்ததால், வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால், ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும் நிதியுதவி வழங்கி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். நடிகர் ஹரிஸ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாய் வெள்ள நிவாரணத்திற்காக வழங்கி இருக்கிறார். அதுமட்டுமன்றி தளபதி விஜய், மக்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யுமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.
#mansooralikhan #chennaicyclone #CinewoodMedia pic.twitter.com/l8ucDHcnHf
— Cinewood Media (@CineWoodMedia27) December 6, 2023