Homeசெய்திகள்சினிமாதிரிஷாவை விமர்சித்த மன்சூர்....சிம்ரன், ஜோதிகாவை விமர்சித்த விஜய்....மீண்டும் தலைதூக்கிய பூகம்பம்!

திரிஷாவை விமர்சித்த மன்சூர்….சிம்ரன், ஜோதிகாவை விமர்சித்த விஜய்….மீண்டும் தலைதூக்கிய பூகம்பம்!

-

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது நட்சத்திர அந்தஸ்தை திரும்ப பெற்றவர் நடிகை திரிஷா. இவர் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர். இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்பவர். சமீபத்தில் வெளியான தி ரோட் மற்றும் அதைத்தொடர்ந்து வெளியான லியோ படத்திலும் திரிஷா நடித்திருந்தார்.

அதேசமயம் லியோ படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில், திரிஷா குறித்து கொச்சையான வார்த்தைகளை பேசி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதனால் மன்சூர் அலிகானுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.திரிஷாவை விமர்சித்த மன்சூர்....சிம்ரன், ஜோதிகாவை விமர்சித்த விஜய்....மீண்டும் தலைதூக்கிய பூகம்பம்!

மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் இவ்வாறு பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலில் சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் ஷியாம் விஜய் குறித்து பேசிய வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர். அதாவது ஷியாம் பேட்டி ஒன்றில், ” 12 B படத்தில் நான் அறிமுகமானபோது விஜய் என்னிடம் முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா என இரண்டு குதிரைகளை ஓட்டுகிறாய்” என்று விஜய் தன்னை கலாய்த்ததாக கூறியிருந்தார். அந்த சமயங்களில் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் எவ்வாறு சிம்ரன் மற்றும் ஜோதிகாவை விமர்சிக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.திரிஷாவை விமர்சித்த மன்சூர்....சிம்ரன், ஜோதிகாவை விமர்சித்த விஜய்....மீண்டும் தலைதூக்கிய பூகம்பம்!

தற்போது அதே விவகாரம் பூகம்பமாக தலை தூக்கி உள்ளது. மன்சூர் அலிகான் பேசியது தவறு என்றால் அன்று ஷியாமிடம் விஜய் பேசியதும் தவறு தான் என்று ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள், விஜய் அப்போது காமெடியாக தான் சொல்லியிருக்கிறார். வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை. ஆனால் மன்சூர் அலிகான் கற்பழிப்பு, பலாத்காரம் என தவறான எண்ணத்தில் பேசியுள்ளார். அது மட்டுமில்லாமல் ‘எல்லோரும் போய் வேறு பொழப்பை பாருங்க’ என்று அலட்சியமாகவும் பதிலளித்துள்ளார் என ஒவ்வொருவரும் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ