Homeசெய்திகள்சினிமாமன்சூர் பேசியது தப்புன்னா... அந்த நடிகையை பற்றி ரஜினி பேசியதும் தப்புதான்.... பாத்திமா பாபு!

மன்சூர் பேசியது தப்புன்னா… அந்த நடிகையை பற்றி ரஜினி பேசியதும் தப்புதான்…. பாத்திமா பாபு!

-

செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்தவர் தான் பாத்திமா பாபு. இவர் சினிமாவிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த 1996 இல் கல்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமான பாத்திமா பாபு, விஐபி, நேருக்கு நேர், முதல்வன், குசேலன் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சில தினங்களாக மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசிய விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மன்சூர் அலிகானுக்கு திரை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவிப்பது, காவல்துறையினர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்வது, மன்சூர் அலிகான் அதற்கு முன் ஜாமின் கோரி மனு அளிப்பது என பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த அப்டேட்டுகளையும் சமூக வலைதளங்கள் அதிவேகமாக பரப்பி வருகின்றனர்.மன்சூர் பேசியது தப்புன்னா... அந்த நடிகையை பற்றி ரஜினி பேசியதும் தப்புதான்.... பாத்திமா பாபு!

அதேசமயம் செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு, சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது தவறு என்றால், ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமன்னாவுடன் கடைசி வரை ஆடவே விடவில்லை என்று கூறியதும் தப்பு தானே? இதற்கு ஏன் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை?” என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.

ஆனால் ரசிகர்கள் பலரும் நகைச்சுவையாக பேசியதற்கும் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக பேசியதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று பாத்திமா பாபுவை பலரும் வறுத்தெடுத்துக்கின்றனர்.

MUST READ