மார்கழி திங்கள் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மார்கழி திங்கள். இந்தப் படத்தின் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் அறிமுக நடிகர்களான சாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இதில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு பழனி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.