தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத படங்கள் பல தொடர்ந்து உருவாகி வருகிறது. அதே சமயம் அது போன்ற காலத்தால் அழிக்க முடியாத படங்களை இயக்கும் இயக்குனர்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர். அப்படி ஒரு இயக்குனர் தான் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாரி செல்வராஜை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அடுத்ததாக இவர் இயக்கிய கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றது. அதாவது மாரி செல்வராஜ் தனது படங்களின் மூலம் பெரும்பாலும் சொல்லத் தயங்கும் ஆனால் சொல்ல வேண்டிய கருத்துக்களை நெத்தி பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுவார். இந்நிலையில் இவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் இவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் வாழை எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் தான் இப்படம் எனது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. மேலும் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படமும் அதே நாளில் தான் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -