Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இணைந்த மாரி செல்வராஜ் பட நடிகர்!

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் இணைந்த மாரி செல்வராஜ் பட நடிகர்!

-

- Advertisement -

மாரி செல்வராஜ் பட நடிகர் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இணைந்த மாரி செல்வராஜ் பட நடிகர்!

கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சனின் இயக்கத்திலும் அனிருத்தின் இசையிலும் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் விமான இமாலய வெற்றி பெற்றது. இந்த படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் ரஜினி, நெல்சன், அனிருத் கூட்டணியில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. அதன்படி ஜெயிலர் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான் நடிகர் ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இணைந்த மாரி செல்வராஜ் பட நடிகர்! அவரைத் தவிர மிர்னா மேனன், யோகி பாபு ஆகியோரின் கலந்து கொண்டுள்ளனர். அடுத்தது மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகும் நிலையில் ஏற்கனவே இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என பல தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில் பகத் பாசிலும் இந்த படத்தில் நடிக்கலாம் என சொல்லப்பட்டது. அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் பகத் பாசில், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இணைந்த மாரி செல்வராஜ் பட நடிகர்!ஏற்கனவே இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், மாரி செல்வராஜின் மாமன்னன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். அதனால் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போகிறாரா? அல்லது வேறு எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்? போன்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ