Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் மார்க் ஆண்டனி!

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் மார்க் ஆண்டனி!

-

விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ‘மார்க் ஆண்டனி‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. அபிநந்தன் ராமானுஜம் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் விஷால், எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து ரித்து வர்மா, செல்வராகவன், சுனில், அபிநயா மற்றும் பலர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் டைம் ட்ராவல் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. விஷாலும், எஸ் ஜே சூர்யாவும் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷாலுக்கு இப்படம் ஒரு சிறந்த கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. எஸ் ஜே சூர்யா வின் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதன்படி நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது 3 நாட்களில் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் நல்ல வசூலை இப்படம் ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ