Homeசெய்திகள்சினிமாமாஸ்க் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

-

லிப்ட், மற்றும் டாடா படங்களின் வெற்றி கவினுக்கு வெள்ளித்திரையில் படிக்கட்டுகளாய் மாறி இருக்கிறது. அவரது டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் தாமதமாக வெளியானாலும், வசூலிலும் வேட்டையாடியது. இதனால், கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருக்கின்றன. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளளின் ஸ்டார் திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்தது.
ஸ்டார் படம் கடந்த மாதம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. ஸ்டார் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு மாஸ்க் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விக்ரணன் அசோக் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெற்றிமாறன், கவின் மற்றும் படக்குழுவினர் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தனர்.

MUST READ