Homeசெய்திகள்சினிமாஏகே 63 படத்தில் களமிறங்கும் மாஸ் வில்லன்!

ஏகே 63 படத்தில் களமிறங்கும் மாஸ் வில்லன்!

-

ஏகே 63 படத்தில் களமிறங்கும் மாஸ் வில்லன்!நடிகர் அஜித் துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடித்து வருகிறார். லைக்கா ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித், மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஏகே 63 படத்தில் களமிறங்கும் மாஸ் வில்லன்!தற்காலிகமாக ஏகே 63 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாம். அதைத் தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் மாதத்தில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது. அதன்படி பிப்ரவரி மாத இறுதிக்குள் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பினை முடித்துவிட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏகே 63 படத்தில் களமிறங்கும் மாஸ் வில்லன்!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி மாஸான, ஸ்டைலிஷ் ஆன வில்லனாக நடித்திருந்தார். இதில் இவர் ஏற்று நடித்த சித்தார்த் அபிமன்யு எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து போகன் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் 27 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. அதே அமயம் இவர், சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ