பிரபல நடிகர் மேத்யூ பெர்ரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இந்தியாவில் பல ஆங்கில தொடர்கள் பிரபலமானதாக உள்ளன. அதில், மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட தொடர், ‘Friends’. இதில் 3 பெண்கள்-3 ஆண்கள் என பேச்சுலர்ஸ் ஆக நியூ யார்க்கில் இருக்கும் ஆறு நண்பர்களையும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி இது காமெடி தொடராக உருவாகி இருந்தது. இதில் Chandler Bing (சேண்ட்லர் பிங்) எனும் கதாப்பாத்திரத்தில் மேத்யூ பெர்ரி என்பவர் நடித்திருந்தார். ஆறு பேர் இந்த தொடரில் நடித்திருந்தாலும் தனது வித்யாசமான காமெடியாலும், உடல் மொழியாலும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் மேத்யூ.
Friends தொடர் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் வெற்றிகரமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸிலும் இத்தொடர் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் விரும்பி பார்க்கும் ‘டாப் 10’ காமெடி தொடர்களுள், Friends-ம் ஒன்று.