Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்!

தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்!

-

மாவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மண்டேலா படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 2ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

MUST READ