Homeசெய்திகள்சினிமா'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

-

மழை பிடிக்காத மனிதன் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தை கோலிசோடா, கடுகு போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சரத்குமார், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ராஜாமணி, விஜய் ஆண்டனி ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைக்க விஜய் மில்டன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கையாண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து படமானது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதற்கு முன்பாக டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது.'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு! மேலும் அதைத் தொடர்ந்து இப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இவன் யாரோ எனும் மூன்றாவது பாடல் நாளை (ஜூலை 17) வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளனர்.

MUST READ