Homeசெய்திகள்சினிமா'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் இவன் யாரோ பாடல் வெளியீடு!

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இவன் யாரோ பாடல் வெளியீடு!

-

மழை பிடிக்காத மனிதன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் இவன் யாரோ பாடல் வெளியீடு!

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து பின்னர் ஹீரோவாக உருவெடுத்தவர். அந்த வகையில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் விஜய் ஆண்டனி, வள்ளி மயில், ஹிட்லர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சரத்குமார், மேக ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. விஜய் மில்டன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க விஜய் ஆண்டனி மற்றும் ராஜாமணி ஆகியோர் படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இதன் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் படத்தின் அடுத்தடுத்த பாடல்களையும் பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவன் யாரோ எனும் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ