Homeசெய்திகள்சினிமாமழை பிடிக்காத மனிதன் திரைப்படம்... இரண்டாவது பாடல் அப்டேட் இதோ...

மழை பிடிக்காத மனிதன் திரைப்படம்… இரண்டாவது பாடல் அப்டேட் இதோ…

-

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

கோலி சோடா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் விஜய் மில்டன். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இத்திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்றது. இதையடுத்து விஜய் மில்டன் தமிழில் படம் இயக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். இத்திரைப்படத்தில் பிரபல இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய்ஆண்டனி நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக ரோமியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில், மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வௌியாகி உள்ளது. அதன்படி, தேடியே போறேன் எனத் தொடங்கும் இந்த பாடல், நாளை ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ