Homeசெய்திகள்சினிமாமழை பிடிக்காத மனிதன் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

மழை பிடிக்காத மனிதன் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

-

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது. 
முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, இசை மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் கொலை, ரத்தம், ஆகிய படங்கள் வௌியாகி வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் இறுதியாக ரோமியோ என்ற திரைப்படம் வௌியாகி வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டது, ஆனால், படம் வெளியாகவில்லை. இப்படத்தில் சரத்குமார், மேகா ஆகாஷ், ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இணையத்தில் இது டிரெண்டாகி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ