Homeசெய்திகள்சினிமாபிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி... வெளியானது அறிவிப்பு... பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி… வெளியானது அறிவிப்பு…
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் மீனாட்சி சௌத்ரி இணைந்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மீனாட்சி சௌத்ரி. தெலுங்கில் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், கடந்த 2023-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த கொலை திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் நாயகியாக இவர் நடித்திருந்தார். இதன் மூலம் பிரபலம் அடைந்தார் மீனாட்சி.
இதைத் தொடர்ந்து தமிழில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனிடையே, தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் அணில் ரவிப்புடி இயக்கும் புதிய திரைப்படத்தில் மீனாட்சி சௌத்ரி இணைந்துள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஸூம் நடிப்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.