10 ஆண்டுகளுக்கு பின் டோலிவுட் பக்கம் திரும்பிய மீரா ஜாஸ்மின்
- Advertisement -

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த அவர் தமிழில் அறிமுகமானார். அதை அடுத்து ஆயுத எழுத்து படத்தில் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான விஞ்ஞானி படத்தில் தான் மீரா ஜாஸ்மின் தமிழில் நடித்திருந்தார்.

அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். டெஸ்ட் திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகை மீரா ஜாஸ்மின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கில் ஸ்ரீ விஷ்ணு, ரிது வர்மா இணைந்து நடிக்கும் ஸ்வாக் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். ராணி உப்தலா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.