Homeசெய்திகள்சினிமாமீரா தங்கமே ....மகளின் பிரிவை எண்ணி உருக்கமான பதிவை வெளியிட்ட விஜய் ஆண்டனியின் மனைவி!

மீரா தங்கமே ….மகளின் பிரிவை எண்ணி உருக்கமான பதிவை வெளியிட்ட விஜய் ஆண்டனியின் மனைவி!

-

- Advertisement -

மீரா தங்கமே ....மகளின் பிரிவை எண்ணி உருக்கமான பதிவை வெளியிட்ட விஜய் ஆண்டனியின் மனைவி!விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர். அதே சமயம் சமீபத்தில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தையும் இயக்கி இயக்குனராகவும் மாறினார். மேலும் பல படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் கடைசியாக கொலை, ரத்தம் போன்ற படங்கள் வெளியானது.

இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா அதிகாலை மூன்று மணி அளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் விஜய் ஆண்டனியின் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட விஜய் ஆண்டனியின் வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இந்த துயரிலிருந்து மீள முடியாமல் விஜய் ஆண்டனியும் அவரின் குடும்பத்தாரும் தவித்து வருகின்றனர். மகள் மீராவின் பிரிவை தாங்க முடியாத துயரத்திலும் , மறக்க முடியாத வலியிலும் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மீரா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், “மீரா தங்கமே… உன் பியானோ நீண்ட நாட்களாக உனக்காக காத்திருக்கிறது. நாங்களும் நம்பிக்கையாக இருக்கிறோம். ஆனால் நீ சீக்கிரமாய் சென்று விட்டாய். ஆனால் அம்மா இன்னும் இங்கே இருக்கிறேன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் உன்னை சந்திக்கும் வரை நன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு. லாராவும் உன்னை மிஸ் செய்கிறாள்” இன்று உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

MUST READ