Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து வெளியாகும் 'மெய்யழகன்' பட புகைப்படங்கள்!

அடுத்தடுத்து வெளியாகும் ‘மெய்யழகன்’ பட புகைப்படங்கள்!

-

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மெய்யழகன். நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருக்கிறார். அடுத்தடுத்து வெளியாகும் 'மெய்யழகன்' பட புகைப்படங்கள்!இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது இரண்டு ஹீரோக்களின் கதையாகும். இதில் கார்த்தி, அரவிந்த்சாமி தவிர ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியாகும் 'மெய்யழகன்' பட புகைப்படங்கள்!மகேந்திரன் ஜெயராஜூ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் 'மெய்யழகன்' பட புகைப்படங்கள்!அதைத்தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த அடுத்த போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன.குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படமானது 2024 செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அடுத்தடுத்து வெளியாகும் 'மெய்யழகன்' பட புகைப்படங்கள்!இந்நிலையில் சமீபத்தில் ராஜ்கிரண், கார்த்தி, ஸ்ரீ திவ்யா ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதைத்தொடர்ந்து கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இணைந்திருக்கும் அடுத்தடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.அடுத்தடுத்து வெளியாகும் 'மெய்யழகன்' பட புகைப்படங்கள்! மேலும் இனிவரும் நாட்களில் மெய்யழகன் திரைப்படத்தின் டீசர், பாடல்கள் போன்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ