Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைகிறதா 'மெய்யழகன்' பட கூட்டணி?

மீண்டும் இணைகிறதா ‘மெய்யழகன்’ பட கூட்டணி?

-

மெய்யழகன் பட கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மீண்டும் இணைகிறதா 'மெய்யழகன்' பட கூட்டணி?

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பில் 96 எனும் திரைப்படம் வெளியானது. அழகான காதல் கதையில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை பிரேம்குமார் இயக்கியிருந்த இந்த படம் பல இளைஞர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாகும். அடுத்ததாக பிரேம்குமார், கார்த்தி நடிப்பில் மெய்யழகன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்திவுடன் இணைந்த அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்திருந்தார். மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். எமோஷனல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் கார்த்திக்கு , ஜப்பான் திரைப்படம் தோல்வி படமாக அமைந்த நிலையில் கார்த்தியின் 27 ஆவது படமாக வெளியான மெய்யழகன் திரைப்படம் இழந்த வெற்றியை மீண்டும் பெற்று தந்தது.மீண்டும் இணைகிறதா 'மெய்யழகன்' பட கூட்டணி? இந்நிலையில் கார்த்தி, பிரேம்குமார் கூட்டணி மீண்டும் இணைய போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது பிரேம்குமார் புதிய கதை ஒன்றை கார்த்தியிடம் சொன்னதாகவும் அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படம் வரலாற்று தொடர்பான கதைக்களம் என்றும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது. அது மட்டுமில்லாமல் கார்த்தி, பிரேம்குமார் கூட்டணி மீண்டும் இணைய போகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ