Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் 'மெய்யழகன்' படத்தின் டீசர்!

கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ படத்தின் டீசர்!

-

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.கவனம் ஈர்க்கும் 'மெய்யழகன்' படத்தின் டீசர்!

நடிகர் கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தியின் 25வது படமாக வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து வா வாத்தியார் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள கார்த்தி தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கவனம் ஈர்க்கும் 'மெய்யழகன்' படத்தின் டீசர்!இதற்கிடையில் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெய்யழகன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் கார்த்தி. குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். சூர்யா, ஜோதிகாவின் 2D நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்திருக்கிறார். மகேந்திரன் ராஜு படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

கோவிந்தராஜ் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மெய்யழகன் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ