பிரம்மாண்ட மெட் காலா விழா… ஜொலித்த நடிகை அலியா பட்..
- Advertisement -

ஹாலிவுட்டில் பெரும் கொண்டாட்டமாக நடைபெறும் விருது விழா மெட் காலா. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஆடை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஆண்டுதோறும் மெட் காலா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சினிமா, விளையாட்டு, இசை என பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் விதவிதமான உடைகள் அணிந்து அணிவகுப்பது வழக்கமாகும். இதில் ஹாலிவுட்டில் தொடங்கி பாலிவுட், கோலிவுட் என அனைத்து தரப்பு முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்வது வழக்கமாகும்.

இதற்காக ஹாலிவுட்டின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் இணைந்து ஆடைகளை தயாரித்தனர்.மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட்டை நினைவுகூரும் வகையில் கடந்த ஆண்டு மெட் காலா நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர் நடிகைகள், பாடகர், பாடகிகள் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கில் மட்டுமன்றி கோடிக்கணக்கில் மதிப்புடைய ஆடைகளையும், ஆபரணங்களையும் அவர்கள் அணிந்து வந்தனர்.

நடப்பு ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பிரபல பேஷன் நிறுவனமான வாக் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்து கொண்டார். வெள்ளை நிற உடையில் ஜொலித்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. பாலிவுட்டின் முன்னணி மற்றும் நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சாப்யாசச்சி முகர்ஜி இந்த ஆடையை வடிவமைத்து இருக்கிறார்.