மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மிர்ச்சி சிவா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, சரோஜா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் தமிழ் படம், வணக்கம் சென்னை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சுமோ எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் சூது கவ்வும் 2 எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதாவது கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் தான் சூது கவ்வும். நலன் குமாரசாமி இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை எஸ் ஜே அர்ஜுன் எழுதியிருக்கிறார். சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அதைத் தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் 2024 டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.