Homeசெய்திகள்சினிமாநீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் மிர்ச்சி சிவாவின் 'சுமோ'.... ரிலீஸ் எப்போது?

நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’…. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் 'சுமோ'.... ரிலீஸ் எப்போது?மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, சரோஜா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து தமிழ் படம், கலகலப்பு, வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சூது கவ்வும் 2 படத்தில் நடித்த வருகிறார். அதேசமயம் இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவா நடிப்பில் சுமோ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. எஸ்பி ஹோசிமின் இந்த படத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். ராஜீவ் மேனன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், விடிவி கணேஷ் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் 'சுமோ'.... ரிலீஸ் எப்போது?

சுமோ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பே ஜப்பானில் தொடங்கப்பட்டது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இப்படத்தின் டிரைலரும் வெளியாகி கவனம் பெற்றது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவின் திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் கூறுகின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ