Homeசெய்திகள்சினிமாமிஷன் படத்திற்காக ஆக்‌ஷன் பயிற்சி... எமி ஜாக்சனின் மாஸ் வீடியோ வைரல்...

மிஷன் படத்திற்காக ஆக்‌ஷன் பயிற்சி… எமி ஜாக்சனின் மாஸ் வீடியோ வைரல்…

-

- Advertisement -

லண்டனை சேர்ந்த வெளிநாட்டு அழகியானவர் எமி ஜாக்சன். இவர், கடந்த 2010-ம் ஆண்டு ஆர்யா நடிப்பிலும், எல்.விஜய் தயாரிப்பிலும் வெளியான மதராசப் பட்டினம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் எமி ஜாக்சன். இப்படத்தில் எமியின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இப்படத்தின் மூலம் கலைப்பயணத்தை எமி ஜாக்சன் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, விக்ரம் நடித்த தாண்டவம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து ஷங்கர் இயக்கத்தில் ஐ, நடிகர் தனுஷின் தங்க மகன், உதயநிதி நடித்த கெத்து, விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் நடித்திருந்தார்.

இந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து ரஜினி நடிப்பில் எந்திரன் 2.0 படத்தில் ரோபோவாக நடித்திருந்தார். இதையடுத்து, மீண்டும் லண்டன் சென்ற எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில், நீண்ட இடைவௌிக்கு பிறகு எமி ஜாக்சன் மீண்டும ரீ என்ட்ரி கொடுத்துள்ள படம் அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1. இப்படத்தையும் ஏ.எல். விஜய் இயக்கி இருக்கிறார். படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்திற்காக எமி சண்டை பயிற்சியில் ஈடுபட்ட காணொலியை படக்குழு இணையத்தில் பகிர்ந்துள்ளது. வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ