Homeசெய்திகள்சினிமாநடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு நெஞ்சு வலி.... தீவிர சிகிச்சை...

நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு நெஞ்சு வலி…. தீவிர சிகிச்சை…

-

- Advertisement -
பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் கடந்த 1966-ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான மிரிகயா என்ற திரைப்டத்தின் மூலம் நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இதைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இந்தி மொழியில் மட்டுமன்றி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட வட மொழிகளிலும், தெலுங்கு தமிழ், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை சுமார் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்கலில் நடிகர் மிதுன் நடித்திருக்கிறார். இவர் தமிழில் ஆதி நடித்து 2015-ம் வெளியான யாகாவா ராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார். திரைப்படங்கள் மட்டுமன்றி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேரந்து எம்.பி.யாகவும் மிதுன் சக்கரவர்த்தி பதவி வகித்தார். இதைத் தொடர்ந்து நிதி நிறுவன மோசடியில் சிக்கிய அவர், கடந்த 2021-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 3 முறை தேசிய விருது வென்ற அவர், பத்மபூஷன் விருதையும் வென்றிருக்கிறார்.

இந்நிலையில், இன்று திடீரென நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

MUST READ