மோகன்லாலின் 360 ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் எம்புரான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் பரோஸ், ராம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் மோகன்லால். இதற்கிடையில் இவர் தருண் மூர்த்தி இயக்கத்தில் தனது 360 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாக இருந்தார். இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிகை சோயாபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு L 360 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தினை ரஞ்சித் தயாரிக்கிறார். போர் தொழில் படத்தின் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்தது இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த அப்டேட் படத்தின் தலைப்பு குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.