மோகன்லால் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
மோகன்லால் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ஒரு புதிய பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ‘விருஷபா’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை நந்தா கிஷோர் எது இயக்க உள்ளார். இந்த படத்தில் மோகன்லால் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் இவருக்கு மகனாக தெலுங்கு நடிகர் ரோஷன் மேகா நடிக்க உள்ளார்.
மேலும் இவர்களுடன் சிம்ரன்,ஷனயா கபூர், கருடா ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படம் ஒரு எப்பிக் ஆக்சன் என்டர்டெயினர் படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.ஒரு அப்பா மகன் இருவருக்கும் இடையே உள்ள அன்பு மற்றும் மோதல் குறித்து விளக்கும் படமாகும்.
ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் வியாஸ், ப்ரவீர் சிங், சியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த படம் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஜூலை மாதம் இறுதியில் லண்டனில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.