Homeசெய்திகள்சினிமாமோகன்லால், ஜுத்து ஜோசப் கூட்டணியின் 'நேரு'..... ரிலீஸ் எப்போது?

மோகன்லால், ஜுத்து ஜோசப் கூட்டணியின் ‘நேரு’….. ரிலீஸ் எப்போது?

-

மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் நேரு படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மோகன்லால் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் வ்ருஷபா படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கிறது.

அதேசமயம் மோகன்லால் த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜுத்து ஜோசப் இயக்கத்தில் நேரு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மோகன்லால் உடன் இணைந்து பிரியாமணி நடிக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விஷ்ணு ஷியாம் இசை அமைப்பிலும் சதீஷ் குரூப் ஒளிப்பதிவிலும் இது உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வாரத்தில் முழுவதும் முடிவடைந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடுதல் தகவலாக நேரு திரைப்படத்தினை நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.ஏற்கனவே மோகன்லால் மற்றும் ஜுத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 1, த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த நேரு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. அதனால் இது குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ