மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
மோகன்லால் தற்போது நந்தா கிஷோர் இயக்கத்தில் வ்ருஷபா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் மோகன்லால் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதனை ஆசீர்வாத் சினிமாஸ் ப்ரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷ்ணு ஷியாம் இசையமைக்கிறார் சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியின் புதிய படத்திற்கு நேரு என்ற தலைப்பிடப்பட்டுள்ளது.
நேரு – SEEKING JUSTICE என்ற டேக் லைனுடன் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த படம் நீதியை தேடுவது சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது என்று தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே மோகன்லால் ஜித்து ஜோசப் இருவரின் கூட்டணி த்ரிஷயம் 1, த்ரிஷயம் 2, 12th Man உள்ளிட்ட படங்களில் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.