மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மோகன்லால் தற்போது நந்தா கிஷோர் இயக்கத்தில் ‘வ்ருஷபா’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து மோகன்லால் ‘த்ரிஷ்யம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணைய உள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் திரைப்படம் வெளியானது. இதில் மோகன்லால், மீனா, அன்சிபா, ரோஷன் பசீர், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் பல்வேறு மொழிகளில் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இரண்டாம் பாகமும் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதன் பிறகு 12th Man என்ற படத்திலும் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணி இணைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதனை ஆசீர்வாத் சினிமாஸ் ப்ரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.