Homeசெய்திகள்சினிமா3-வது முறையாக மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லால் தேர்வு

3-வது முறையாக மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லால் தேர்வு

-

 மலையாள திரையுலகில் லாலேட்டனாக அனைவராலும் கொண்டாடும் நாயகன் மோகன்லால். 80-களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ப கதைக்களத்தையும் தேர்வு செய்து சிறந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. மலையாளத்தில் வசூலைக் குவித்த இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் ஆனது. மோகன்லால் நடிப்பில் இறுதியாக நேரு, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படங்கள் வெளியாகின.
இதனிடையே மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு திரைப்படம் பரோஸ். ஜிஜோ புன்னூஸ் எழுதிய ஒரு நாவலை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் மோகன்லால் நடிக்க மட்டும் இல்லை, இப்படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். அவரது நடிப்பில் தற்போது லூசிபர் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மேலும், பிருத்விராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் மோகன்லால், ஒரு மனதாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது முறையாக அவர், நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதனால், பதவிக்கு போட்டியிட இருந்தவர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்

MUST READ