மோகன்லால் உள்பட அனைவரும் ராஜினாமா. நடிகர் சங்கப் பதவி ராஜினாமா செய்தார் மோகன்லால்.
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிஷன் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கையில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உண்மைதான் என்று தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு சில நடிகைகள் பிரபல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு நிர்வாகிகள் 17 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். நடிகைகளின் புகார் குறித்து ஆலோசிக்க இன்று இச்சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில், அது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரிக்கும் ஊடகங்கள் ஏன் கேட்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்திய அவர் ஊடகங்களின் மைக் உள்ளிட்டவற்றைப் பிடுங்கி எறிந்தார்.
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.