Homeசெய்திகள்சினிமா20 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜோடி... எல்360 படப்பிடிப்பு தொடக்கம்...

20 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜோடி… எல்360 படப்பிடிப்பு தொடக்கம்…

-

கோலிவுட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் போல, மோலிவுட்டுக்கு லாலேட்டன் என்று தான் சொல்ல வேண்டும். அன்று தொடங்கி இன்று வரை மலையாள திரையுலகை கட்டி ஆள்கிறார் மோகன்லால். இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால். இறுதியாக ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் தமிழில் நடித்திருந்தார். அப்படமும், அதில் இடம்பெற்ற அவரது கதாபாத்திரமும் வரவேற்பு பெற்றது. மலையாள நடிகராக இருந்தாலும், அவ்வப்போது கதைக்கு தேவைப்பட்டால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து நெரு திரைப்படம் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியானது. இப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, சென்னை, கேரளா என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், மோகன்லால் மற்றும் ஷோபனா இணைந்து நடிக்கும் எல்360 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக ஷோபனா ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56-வது திரைப்படமாகும். மோகன்லாலுக்கு இது 360-வது படமாகும். ஷோபனா சுமார் 20 ஆண்டுகள் கழித்து மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இத்திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார்.

MUST READ